• Jul 05 2026

கதிரை கட்டிப்பிடித்து கதறி அழுத ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வடிவு ராஜியைப் பார்த்து IPS ஆகிடுவ என்று சொல்லுறார். அதனை அடுத்து ராஜி காந்திமதியைப் பார்த்து கதிர் அப்படி நடந்து கொள்ளுவான் என்று எதிர்பார்க்கல என்று சொல்லுறார். அதைக் கேட்ட காந்திமதி அவனும் என்ர பேரன் தானே விடு என்கிறார். மறுபக்கம், மீனா காபி அடிக்கடி குடிச்சுக் கொண்டிருக்கிறதைப் பார்த்த செந்தில் ஒரு நாளைக்கு எத்தின தடவை தான் காபி குடிப்ப என்று சொல்லிப் பேசுறார்.

அதனை அடுத்து மீனாவோட அம்மா கோமதி வீட்ட வந்து நீங்க சென்னைக்கு போகப்போறீங்க என்று கேள்விப்பட்டேன். சென்னையில எங்க அண்ணா வீடு இருக்கு அங்க போய் தங்குங்க என்று சொன்னா மீனா அதுக்கு சம்மதிக்கிறாள் இல்ல என்கிறார். இதைக் கேட்ட மீனா எதுக்கு அவங்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கணும் என்று கேட்கிறார்.


பின் கோமதி மீனா சொந்தக்காரங்க வீட்டில தங்கிறதுக்கு சம்மதிக்கிறார். மறுபக்கம், கதிர் ராஜியைப் பார்த்து எல்லாம் எடுத்திட்டியா என்று கேட்கிறார். மேலும், எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் நீ IPS ஆகணும் என்றது என்ர கனவு என்று சொல்லுறார். 

அதைத் தொடர்ந்து கதிர் பேசினதைக் கேட்ட ராஜி எதுவுமே கதைக்காமல் அவரை கட்டிப் பிடிச்சு அழுகிறார். பின் சென்னைக்கு தான் வராமல் இருக்கிறதுக்கு sorry சொல்லுறார் கதிர். அப்புடியே எல்லாரும் சென்னைக்கு கிளம்புறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement