• Apr 28 2024

சற்று முன்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ளது. மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரை 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.தற்பொழுது 15 போட்டியாளர்கள் மாத்திரமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், தனலட்சுமி,  கதிரவன்,  ராம்,  அமுதவாணன்,  மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய ஏழு பேர் சிக்கிய நிலையில்... இதில் யார் வெளியேறுவார் என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தது.


அந்த வகையில் இந்த வாரம், கதிரவன், அசீம், தனலட்சுமி ஆகியோர் ஓரளவுக்கு நிறைய வாக்குகளை பெற்று, அடுத்தடுத்த நிலையில் சேஃப் சோனில் உள்ளதாக கூறப்பட்டது. ராம், மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், ஆகியோர் சமமான நிலையில் வாக்குகளை பெற்றுள்ளதாகவும், சில வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், இவர்கள் நால்வரில் யார் வெளியேறுவார் என்பது புரியாத புதிராக இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, சற்று முன்னர் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். என பிக்பாஸ் வட்டாரத்திலிருந்து அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால் இவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement