• Apr 26 2024

குக் வித் கோமாளி 4ல் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் ...ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. 

எனினும் இதன் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது.

இந்த எலிமினேஷன் சுற்றில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த கிரண் மற்றும் கஜேஷ் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்பது போல் இருந்தது.

மேலும் இதில் நடுவர்களிடம் இருந்து குறைந்த மதிப்பெண்கள் பெற்ற கஜேஷ் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.


எலிமினேஷன் போது கஜேஷ் கூறுகையில் "இது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அத்தோடு எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் போது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது. எனினும் அதை மட்டும் இனி நான் மிஸ் செய்யப்போகிறேன். மற்றபடி வேறு எதுவுமில்லை " என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement