• Apr 20 2024

இரண்டு நாட்களில் பிச்சைக்காரன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா...வெளியானது தகவல்..!

Aishu / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த 19ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2. அத்தோடு பிச்சைக்காரன் 1 எவ்வளவு பெரிய ஹிட்டானது என்பதை நாம் அறிவோம்.

எனினும் அதை தொடர்ந்து விஜய் ஆண்டனி இயக்கி நடித்து பிச்சைக்காரன் 2 மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது.

அத்தோடு முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வரும் பிச்சைக்காரன் 2 படம் முதல் நாள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டு நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிச்சைக்காரன் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ. 15 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.

மேலும் இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது. கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement