• May 29 2023

அர்ஜுனின் சதித்திட்டதால் கோதைக்கு நெஞ்சுவலி...தாறுமாறாய் திட்டும் ராகினி..தமிழ் என்ன செய்யப்போகிறார்..?

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது தமிழும் சரஸ்வதியும் தொடர்.மேலும்  இதில் தீபக் மற்றும் நக்ஷத்திரா ஆகியோர் ஹீரோ,ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் தமிழ் மற்றும் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியேறி தனியாக கம்பெனி தொடங்கி முன்னுக்கு வர முயற்சித்து வருகின்றனர். அத்தோடு வசுந்தராவுக்கு குழந்தை பிறந்தது போல சமீபத்தில் காட்சிகளும் வந்திருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் தமிழ் தனியாக தொடங்கிய கம்பெனியை வீழ்த்துவதற்கு அர்ஜீன் பல சதித்திட்ட வேலைகளை செய்து வருகின்றார்.அதாவது தமிழுக்கு வந்த ஓடர் 500 பீஸ் பொருட்களை காணமால் ஆக்கிவிட தமிழுக்கு வந்த ஓடர் கான்சல் ஆகிவிடுகின்றது.

பின்னர் அதை தமிழ் கண்டுபிடித்து தனது தாயின் முன்னிலையில் நிரூபிக்கின்றார்.இதனால் கோவசமடைந்த தாய் எல்லோரையும் திட்டுகின்றார்.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கோதை தனது மாப்பிள்ளையான அர்ஜீனை திட்டுகின்றார்.அதற்கு கோவம் அடைந்த ராகினி எப்பிடி நீங்க அவரை திட்டலாம்.நாங்க இந்த வீட்டை விட்டு போறோம்.என கத்திப் பேச கோதையும் போறவங்க போகலாம் என கத்தி திட்டுகின்றார்.

இந்நிலையில் கோதைக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிடுகின்றது.இதன் பின் நேரடியாக ராகினி தமிழ் வீட்டிற்கு சென்று உன்னால் தான் அம்மாவிற்கு இப்படி ஆகிட்டு..அம்மாவிற்கு ஏதும் ஆனா அதுக்கு நீ மட்டும் தான் காரணம் என திட்டுகின்றார்.

இதன் பின்னர் தமிழ் கோயிலுக்கு வந்து தனது தாயிற்காக வேண்டுகின்றார்.இதனை தமிழின் அப்பா மறைந்து நின்று பார்த்து கண்ணீர் வடிக்கின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement