• May 02 2024

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட தந்தை... ஆத்திரத்தில் மகன் செய்த செயல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஆனது கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3 ஆண்டுகளாக எண்ணப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


இம்முடிவுகளின் படி நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்று சங்கத்தின் பெரும்பாலான பதவிகளை கைப்பற்றினர். அதன்படி தலைவராக நாசரும், பொருளாளராக கார்த்தியும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பாக்யராஜ் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கூடிய செயற்குழு ஆனது, சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் உங்களை நீக்கக்கூடாது என்றும், இதற்காக 15 நாட்களுக்குள் உடனடியாக விளக்கமளிக்குமாறும் பாக்யராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


இதேபோன்றே நடிகர் உதயாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது பாக்யராஜும், உதயாவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனால் ஆத்திரமடைந்த நடிகர் பாக்யராஜின் மகனான நடிகர் சாந்தனு தன்னுடைய ட்விட்டர் மூலமாக பதிவு ஒன்றினை இட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். அதாவது "எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது" எனக் கூறி ஒரு பதிவை போட்டிருந்தார். 


மேலும் பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிய நாசர், கார்த்தி, விஷால் ஆகியோர் மீதுள்ள கோபத்தில் தான் சாந்தனு இவ்வாறு பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement