• May 19 2024

'பிக்பாஸ் 6' இல் கலந்து கொள்ளவுள்ள முழுப் போட்டியாளர்கள் விபரம் இதோ... அப்போ அந்த விஷயத்துக்கு பஞ்சமே இருக்காது போல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாகிய விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது 'பிக்பாஸ்' தான். இதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது வருகிற ஆக்டோபர் 9-ஆம் தேதி துவங்குகிறது.

இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் அடிக்கடி வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் 6இல் கலந்துகொள்ளவிருக்கும் ஏறக்குறைய உறுதியான அனைத்து போட்டியாளர்கள் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


அந்தவகையில் விஜே. ரக்ஷன், பாரதி கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி அர்ச்சனா, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, ரவீந்தர், மஹாலக்ஷ்மி, சரவணன் மீனாட்சி ரச்சிதா மஹாலக்ஷ்மி, விஜே அஞ்சனா,  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பிக்பாஸ் 6இல் கலந்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.


மேலும் இவர்களோடு இணைந்து தொகுப்பாளினி டிடியும் கலந்துகொள்ளப் போகின்றார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement