இன்றைய தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் ஆகிய இருவரும் பெற்றிருக்கும் புகழைத் தாண்டி தமிழ் சினிமாவில் இரு நடிகர்கள் கொடி கட்டி பறந்தனர் என்றால், அது நிச்சயம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்.
இந்த காலகட்டத்தில் ஒரு நடிகர் கோடிகளில் சம்பளம் வாங்குவதும், அவர்களுடைய திரைப்படம் கோடிகளில் விற்பனை ஆவதும் சர்வ சாதாரணமாக ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சுமார் 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் அவர்களுடைய திரைப்படங்கள் கோடிகளில் வசூல் செய்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
60 ஆண்டுகளுக்கு முன்பே பெரிய அளவில் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், வெளிநாடுகளுக்கு சென்று படமாக்கப்பட்ட படங்களை உருவாக்கி வெளியிட்டவர்கள் தான் மக்கள் திலகமும், நடிகர் திலகமும். அந்த வகையில் 1973 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படம் வெளிநாட்டில் படபடப்பு நடத்தப்பட்டு வெளியான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விழா கண்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியிலும், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. 1973 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சுமார் 4.2 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அதேபோல நடிப்புலகில் கடவுளாக பார்க்கப்படும் நடிகர் திலகம் ஐயா சிவாஜிகணேசன் நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியான திரிசூலம் என்ற திரைப்படம் வெள்ளிவிழா கண்ட திரைப்படம். இதுவும் வெளிநாடுகளில் படபிடிப்பை நடத்தப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படம் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த இரு திரைப்படங்கள் வெளியான பிறகு மக்கள் திலகம் அவர்களுடைய சம்பளமும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய சம்பளமும் பெரிய அளவில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!