• Oct 09 2024

ஜனார்த்தனின் இரண்டாவது மருமகனை அடித்த மூர்த்தி- கடும் கோபத்தில் இருக்கும் முல்லையின் அம்மா -Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தியின் புதுவீட்டுக்கு வரும் முல்லையின் அம்மா இவங்க குருவிக் கூடு மாதிரி தானே வீடு கட்டுவாங்க, இப்போ என்ன இவ்வளவு பெருசா கட்டியிருக்கிறாங்க என்று சொல்ல முல்லையின் அப்பா வாயை மூடிட்டு சும்மா வா என்று சமாளிக்கின்றார். பின்னர்  வீட்டிற்கு தனத்தின் பெயரைப் போட்டிருப்பதைப் பார்த்து இது என்ன அவ வீட்டில கொடுத்த வீடா எதுக்கு அவ பெயரை போட்டிருக்கு நான் போய் கேட்டிட்டு வருகின்றேன் என்று கிளம்புகின்றார்.


அப்போது முல்லை வந்து நீ சசும்மாவே இருக்கமாட்டியா, எந்த பிரச்சினையும் பண்ணாமல் ஒழுங்கா உள்ள வாஎன்று கூட்டிட்டு போகும் போது கதிர் வர கதிரிடமும் எதுக்காக தனத்தின் பெயரை வைச்சீங்க என்று கேட்க கதிர் சமாளித்து அனுப்புகின்றார். பின்னர் மீனாவிடமும் இது குறித்து கேட்க மீனா அக்காவோட பெயரை வைக்க சொன்னதே நாங்க தான் என்று சொல்லி சமாளிக்கினன்றார்.

இவர்களைத் தொடர்ந்து அங்கு வரும் மீனாவின் பெற்றோரும் தனத்தின் பெயரை வைத்ததால் மீனாவிடம் கோபப்பட்டு பேசுகின்றனர் உன் பெயரை வைத்தால் என்ன ஆகிடப்போகுது என்று சொல்ல மீனாவும் சமாளித்து விட்டு அங்கிருந்து செல்கின்றார். பின்னர் அங்கு வரும் தனத்தின் அண்ணா மற்றும் அம்மா இருவரும் தனத்தின் பெயரை வீட்டுக்கு வைத்திருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.


தொடர்ந்து கிரகப்பிரவேசம் நடத்துவதற்காக எல்லோரும் சாமி போட்டோக்களைக் கொண்டு உள்ளே வருகின்றனர். பின்னர் சடங்குகளை தனமும் மூர்த்தியும் இருந்து செய்கின்றனர். இதைப் பார்த்த முல்லையின் அம்மா இவங்க தான் இதைப் பண்ணனுமா என்று கேட்க தனத்தின் அம்மா இவங்க தானே இந்த வீட்டில பெரியவங்க என்று சொல்கின்றார். இதைக் கேட்ட முல்லை இரண்டு பேரையும் பேசாமல் இருக்கச் சொல்கின்றார். தொடர்ந்து எல்லோரும் பூஜையில் ஈடுபடுகின்றனர்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement