ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷாலுடன் எஸ்ஜே சூர்யாவும் லீடிங் கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.இந்தத் திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் குறித்து வெளுத்து வாங்கியுள்ளார்.
அதாவது விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் என்று தொடர்ந்து பேசப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், லட்சுமி மேனன் நடிகை என்பதை தாண்டி ஒரு பெண். அவரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுமாதிரியான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.
அதேசமயம் விஷாலின் இந்த விளக்கத்துக்கு முன்னதாக ஒரு வீடியோவில் பேசியிருந்த பயில்வான் ரங்கநாதன், 'விஷாலும் லட்சுமி மேனனும் காதலித்தார்கள். இருவருக்கும் திருமணம் நடைபெறும் நிலைமை வரை சென்றது. ஆனால் திடீரென்று அவர்களது திருமணம் நின்றுவிட்டது. இதனால் லட்சுமி மேனன் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்ப சென்றுவிட்டார் என கூறியிருந்தார்.
இந்நிலையில் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "பயில்வான் ரங்கநாதனை போகியில் பழைய பொருட்களோடு சேர்த்து எரிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. யாரும் யாரை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எல்லை மீறக்கூடாது. இவரெல்லாம் பூமிக்கு பாரமாக இருக்கக்கூடிய ஆள். இவருக்கும் மனைவி, மகள் இருப்பார்தானே. அப்படி இருக்கும்போது ஏன் ஒரு பெண்ணைப் பற்றி தேவையில்லாமல் இப்படி பேச வேண்டும்" என குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!