• Sep 26 2023

சிறுமி கழுத்தில் மாலை போட்டு அசால்ட்டாக தூக்கிய தமன்... வியப்பில் நடுவர்கள்... சூப்பர் சிங்கரில் நிகழ்ந்த சூப்பரான சம்பவம்...!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் தான் senior super singer-9 இடம்பெற்று முடிந்தது. இதனையடுத்து தற்போது சிறியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாகி இருக்கின்றது. 


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் மேக்னா என்ற சிறுமி ரொம்ப அழகாகப் பாடுகின்றார். இதனையடுத்து மேடைக்கு ஓடிச் சென்ற இசையமைப்பாளர் தமன் மேக்னாவிற்கு மாலை அணிவித்து அவரை அப்படியே கட்டி அணைத்துத் தூக்குகின்றார்.


அதுமட்டுமல்லாது மேக்னாவின் பர்போமான்ஸ் பார்த்து அங்கிருந்த ஏனைய நடுவர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பின்னர் நடுவரான பாடகி சித்ராவுடன் இணைந்து மேக்னாவும் "மதுரை மரிக்கொழுந்து வாசம்.." என்ற இந்தப் பாடலை பாடி அசத்துகின்றார்.  


Advertisement

Advertisement

Advertisement