• Sep 30 2023

கல்யாணத்துக்கு பட்டு வேட்டி சட்டை ரெடி - திருமணத்திற்கு ரெடியாகும் நாஞ்சில் விஜயனுக்கு கிடைத்த சூப்பர் கிப்ட்- வைரலாகும் வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸ் ஆனவர் நாஞ்சில் விஜயன். இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் பெண் கெட்டப்பில் தான் நடித்திருக்கிறார். விஜய் டிவியை தாண்டி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்ட வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


நாஞ்சில் விஜயனுக்கு சமீபத்தில் வீட்டில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

இவர் திருமணம் செய்யப்போவது நண்பர்கள் மூலமாக அறிமுகமான பெண் தானாம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி நாஞ்சில் விஜயனின் திருமணம் நடைபெற இருக்கிறதாம் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது நாஞ்சில் விஜயனுக்கு பிரபல ஆடைநிறுவனம் ஒன்று பட்டுவேட்டி சட்டை பரிசாக அளித்துள்ளதோடு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.இது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement