• Apr 25 2024

தளபதி 67 படத்தில் வில்லனாக தெரிவு செய்யப்பட்டது இந்த மாஸ் ஹுரோவா?- அப்போ விஷால் இல்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதால் அப்படத்தின் ரிலீஸ் பணிகள் ஒருபுறம் படு பிசியாக நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார்.இப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது.இதில் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட தளபதி 67-ல் பணியாற்றும் குழுவினரும் கலந்துகொண்டனர். 


ஆனால் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இப்படத்தில் வில்லனாக விஷால் நடிக்க போகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. விஷால் தான் இப்படத்தில் வில்லன் என்று ஏறக்குறைய உறுதியானது.


ஆனால், விஷாலுக்கு முன்பே இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுனிடம் அணுகினாராம் லோகேஷ். அப்போது அர்ஜுன் இல்லை என்ற பிறகு தான் விஷாலிடம் சென்று வில்லனாக நடிக்க கேட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது.இந்நிலையில், நேற்று போடப்பட்ட தளபதி 67 பூஜை விழாவில் அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார். இதன்மூலம் தளபதி 67 படத்தில் அர்ஜுன் நடிப்பது உறுதியாகியுள்ளது என தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement