• Apr 28 2024

வெளியாவதற்கு முன்பே பல சாதனைகள் படைத்த ‘தளபதி 67’.! வெளியான முழு விபரம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் நடிப்பில்  இறுதியாக  வெளிவந்திருந்த படம் தான் வாரிசு .இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது எனலாம்.

அதனை தொடர்ந்து  தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வந்து விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் உற்சாக படுத்தியுள்ளது. மேலும் தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் நிறுவனம் பெரிய பெரிய அப்டேட் கொடுத்து மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.

அந்த வகையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அனைவரையும் படக்குழு அறிவித்திருந்தது. படம் தொடர்பான அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அதனை தொடர்ந்து இன்று தளபதி 67 படத்தின் தலைப்பு என்ன என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறது.

இதற்கிடையில் , தளபதி 67 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகள் படைத்துள்ளது. அது என்னென்ன சாதனைகள் என்பதை பார்க்கலாம். அதன்படி, படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. டிஜிட்டல் உரிமைகள் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதிக தொகையில் வாங்கியுள்ளது.

சாட்டிலைட் உரிமையை சன்டிவி நிறுவனம் இதுவரை எந்த தமிழ் படங்களையும் வாங்காத ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. 

இதன் மூலமே படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. எனவே படம் வெளியான பிறகு வசூலில் எந்த அளவிற்கு சாதனை செய்யப்போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement