• Apr 17 2026

லேடி சூப்பர் ஸ்டார் கண்களில் கண்ணீரா? விக்னேஷ் சிவனை விலகிய நயன்தாரா? தீயாய் பரவும் இன்ஸ்டா ஸ்டோரி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும்,  சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் காணப்படுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து  வருகிறார் நயன்தாரா.

அண்மையில் தாதாசாகெப் பால்கே இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் ஜவான் படத்திற்காக நடிகைக்கான விருது நயன்தாரா பெற்றிருந்தார்.

இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது காதல் கணவர் மற்றும்  அவருடைய குழந்தைகளான உயிர், உலகுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களையும் பகிர்வார்.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துள்ளதாக தகவலொன்று வைரலாகியுள்ளது.


மேலும், அவரது இன்ஸ்டா பதிவில், 'எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்' என கேப்சன் போட்டு ஷேர் பாணியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், விக்கியும் நயனும் சண்டைபோட்டு விட்டார்களா என சந்தேகித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.





Advertisement

Advertisement