தமிழக அரசியலில் நடிகர் விஜய் முதலமைச்சராக ஆனது கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக இருந்து வருகின்றது. திரைப்பட உலகில் உச்ச நடிகராக இருந்த விஜய் தற்போது முழுநேரமாக அரசியலில் பயணிக்க தொடங்கியுள்ளார்.
தன்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றியை அரசியலில் நிலைநாட்டியுள்ளார் விஜய். இவர் வெற்றி பெறுவாரா என சந்தேகக் கண்ணுடன் பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி முதலமைச்சராக ஆனார்.
மேலும், தமிழ் சினிமாவில் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், 2024 ஆம் ஆண்டு “தமிழக வெற்றிக்கழகம்” என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்தக் கட்சியை ஆரம்பித்த இரண்டு வருடங்களில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே விஜய் வெற்றி பெற்றது பலருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகை தொடர்பாக நடிகர் போஸ் வெங்கட் தொடர்ந்து தனது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். தற்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதன்படி அவர் மேலும் கூறுகையில்,
கங்குவா படத்தை ரொம்ப நம்பினேன். இந்த படம் வந்தால் வாழ்க்கையே மாறிடும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அந்த படம் ஏன் தோல்வியடைந்தது என்பது இன்னும் எனக்கு புரியாத புதிர். அதேபோல இப்போது விஜய் சார் எப்படி வெற்றி பெற்றார் என்பதும் எனக்கு புரியவில்லை. அவர் வெற்றி எப்படி ஒரு புதிரோ, அதே மாதிரி கங்குவா தோல்வியும் ஒரு புதிர்தான் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களை புத்திசாலிகள் என்று தான் நினைத்தேன். ஆனால் எப்போது விஜய்க்கு ஓட்டு போட்டு முதலமைச்சர் பதவியில் உட்கார வைத்தார்களோ, அன்றே இந்த மக்கள் மீது இருந்த மரியாதை குறைந்துவிட்டது. சினிமா மோகத்தில் இனி தமிழ்நாட்டுக்கு பல பிரச்சனைகள் வரப்போகிறது. விஜய் ஆட்சியை கலைத்துவிட்டு கூடிய சீக்கிரமே ஓடுவார் என்றும் தெரிவித்துள்ளார்
Listen News!