• Jul 05 2026

தமிழகமே என் வீடு..!! ஷாலின் ஜோயாவின் உருக்கமான வார்த்தைகள் வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாராட்டு பெற்றவர் நடிகை ஷாலின் ஜோயா. 

தமிழ் சினிமாவிலும் காலடி பதித்த அவர், ராஜா மந்திரி, கண்ணகி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது இயல்பான பேச்சாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய ஷாலின் ஜோயா, தமிழ் மக்களுக்கு தனது அன்பை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 


"மலையாள மீடியாவா தமிழ் மீடியாவா என்று கேட்டால் தமிழ் என்றுதான் சொல்வேன். என்னை அங்கீகரித்தது தமிழ் மக்கள்தான். அன்பு பாசம் மரியாதை எல்லாம் இங்கேதான் கிடைத்தது. தமிழ்நாட்டில் என்னை வீட்டுப் பெண்ணாக பார்க்கிறார்கள். தமிழ்நாடு என் இரண்டாவது வீடு இல்லை — அது என் வீடு!"

ஷாலின் ஜோயாவின் இந்த வார்த்தைகள் தமிழ் ரசிகர்களின் மனதை ஆழமாக தொட்டுள்ளன. சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பெரும் பாராட்டை பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement