• Jul 05 2026

மலையாளத் திரையுலகின் கிளாசிக் தம்பதிக்கு இன்று கல்யாண நாள்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மோகன்லால் ஆகியோர் இன்று தங்களது 38வது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தயாரிப்பாளர் கே. பாலாஜி அவர்களின் மகளான சுசித்ராவை திருமணம் செய்துகொண்டது அப்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது.


இந்த தம்பதியருக்கு பிரணவ் மற்றும் விஸ்மயா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் பிரணவ், தந்தையைப் போலவே சினிமாவில் தனது பாதையை அமைத்து, மலையாள படங்களில் நடித்துவருகிறார். 

திருமண வாழ்க்கையில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த தம்பதியினர், திரையுலகில் மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையிலும் பலருக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர். 

எளிமை, பரஸ்பர புரிதல் மற்றும் ஆதரவு ஆகியவற்றின் மூலம் அவர்கள் உறவை வலுப்படுத்தியுள்ளனர். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement