• Feb 04 2026

நீ ஒரு நம்பிக்கை துரோகி பாக்கியா..! முத்துவின் விபரீத முடிவு? மகாசங்கமத்தின் இன்றைய எபிசோட் அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ராஜியை கண்ணன் மிரட்டிக் கொண்டு இருக்க, பாக்கியா அதை பார்த்துவிட்டு செல்கிறார்.

மறுபக்கம், ஈஸ்வரியும், செழியனும் பாக்கியா இருக்கும் கோவிலுக்கு வர, ஈஸ்வரிக்கு எல்லா உண்மையும் தெரிகிறது. அதை தொடர்ந்து ஜெனியின் குடும்பமும் அங்கு வருகிறது. பாக்கியா குழந்தையை ஜெனியிடம் கொடுக்க, ஈஸ்வரி நீ ஒரு நம்பிக்கை துரோகி, நீ ரொம்ப தான் ஆடுறா, வீட்டுக்கு தானே வரணும் அப்போ பாத்துக்கிறேன் என கோவமாக திட்டி செல்கிறார்.

செழியனும் பாக்கியாவுடன் கோவமான இருக்க, பாக்கியா அவருக்கு உண்மையை சொல்லி சமாதானம் செய்கிறார். எழிலும், உன் பக்கம் இருக்கிற நியாயத்தை ஜெனிக்கு எடுத்து சொல்லு என அட்வைஸ் பண்ணுகிறார்.

இன்னொரு பக்கம், ராஜி குடும்பமே அழுது கொண்டு இருக்க, முத்து ரூமுக்குள் போய் கதவை பூட்டுகிறார். இதை பார்த்த கோபி எல்லாரிடமும் சொல்ல, அனைவரும் சேர்ந்து கதவை தடுக்கிறார்கள்.

எனினும் அவர் தப்பான முடிவு எடுப்பதாக காட்டப்படுகிறது. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement