• Oct 05 2026

நான் அம்மாவானால் இப்படித் தான் இருப்பேன்.! சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த தமன்னா..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா தனது எதிர்கால தாய்மை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

இந்நிலையில், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால் எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள் என தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனது அம்மா தன்னை மிகவும் கண்டிப்பான தாயாக இருப்பார் என நினைப்பதாக கூறினார். ஆனால், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தான் மிகவும் கூலான அம்மாவாக இருக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், குழந்தைகளுடன் எப்போதும் ஜாலியாகவும், சகஜமாகவும் பழக வேண்டும் என்றும், அவர்களிடம் ஒரு தாயாக மட்டுமின்றி நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தமன்னா கூறியுள்ளார். குறிப்பாக, “இன்று பள்ளிக்கு போக வேண்டாம், வீட்டிலேயே சந்தோஷமாக இருங்கள்” என சொல்லும் அம்மாவாக இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement