• Jul 12 2026

"சூரிய வம்சம்" தான் என் வாழ்க்கையின் அடையாளம்.! சரத்குமாரின் நெகிழ்ச்சிப் பதிவு வைரல்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் காலம் கடந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்து நிற்பதென்றால் அது ‘சூரிய வம்சம்’ தான். கடந்த 28 ஆண்டுகளாக பல தலைமுறைகள் அந்த திரைப்படத்தை நேசித்து வரும் சூழ்நிலையில், அதில் கதாநாயகனாக நடித்த சரத்குமார் தற்போது ‘3BHK’ திரைப்பட விழாவில் ஒரு உணர்ச்சி மிகுந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


‘3BHK’ திரைப்பட விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் உள்ளிட்டோர் மேடையேறி, படத்தின் கதை, காட்சிகள், மற்றும் திரைக்கதை குறித்து உற்சாகமாக பகிர்ந்தனர்.


அதன்போது சரத்குமார், "28 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் நடித்த "சூரிய வம்சம்" திரைப்படம் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது." எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

'3BHK' திரைப்படம் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இது ஒரு குடும்பத்துடன் இணைந்த சமூக, உளவியல் சிக்கல்களை பதிவு செய்கிறது. இது தமிழ்ச் சினிமாவிற்கு புதிய அனுபவத்தை அளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement