• Jan 15 2025

புகை பிடிக்கும் வீடியோவை வெளியிட்டதே இதற்காக தான்.. சூர்யா நினைச்சது நடந்துருச்சு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44 ’படத்தின் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளில் வெளியானது என்பதும் இந்த வீடியோ அட்டகாசமாக இருந்ததாக சூர்யா ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சூர்யா புகைபிடித்த காட்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தது.

தமிழக அரசியல்வாதிகள் சிலர் இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சிவகுமார் உங்களுக்கு நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லையா? கார்த்தி தனது படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார், அந்த பழக்கம் ஏன் உங்களிடம் வரவில்லை? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.



இந்த நிலையில் சூர்யா தனது 44 வது படத்தில் புகை பிடிக்கும் காட்சியை வேண்டும் என்றே வைத்ததாக கூறப்படுகிறது. சூர்யாவின் ’கங்குவா’ படம் பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் ’சூர்யா 44' படம் குறித்த எந்தவிதமான ஹைப்பும் இல்லாமல் இருந்தது என்றும் எனவே புகை பிடிக்கும் காட்சி போன்ற சர்ச்சைக்குரிய காட்சியை வைத்தால் இந்த படத்திற்கு கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்று சூர்யா நினைத்ததாகவும் அதனால்தான் தனது பிறந்த நாளில் வெளியான வீடியோவில் புகை பிடிக்கும் காட்சியை அவர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் ’சூர்யா 44’ படத்தில் புகை பிடிக்கும் காட்சி இல்லை என்றும் ப்ரமோஷன் வீடியோவுக்காக மட்டுமே இந்த காட்சிகள் படமாக்கப்பட்டது என்றும் சூர்யா நினைத்தபடியே அரசியல்வாதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி படத்திற்கு ஒரு விளம்பரம் கிடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement