தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் தற்போது தளபதி 66 படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார்.தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை ராஷ்மிகா நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஒன்று.
மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம், வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க பல நடிகர், நடிகைகள் ஆசைப்படுவார்கள். மேலும் அந்த வகையில் தற்போது பிரபல நடிகை லிஜோமோல் ஜோஷ் விஜய்யுடன் நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நடிகை லிஜோமோல் ஜோஷ், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ஜெய் பீம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!