• Nov 02 2024

சூர்யா 46 அப்டேட் வந்தாச்சு! அப்போ வாடிவாசல் அப்டேட் என்னாச்சி?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி வெளியாக இருக்கிறது.இந்நிலையில் சூர்யா46 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. 


அந்த அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த அவரது 44 ஆவது படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் சூர்யாவின் 46 வது திரைப்படத்தை இயக்குனர் நவீன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.


கடந்த 2013 ஆம் ஆண்டு ஓவியா நடித்த ’மூடர்கூடம்’ என்ற படத்தை இயக்கிய நவீன் அதன்பிறகு விஜய் ஆண்டனி நடித்த ’அக்னி சிறகுகள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆகாமல் தாமதம் ஆகி வரும் நிலையில் சூர்யாவின் 46 வது படத்தை நவீன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


Advertisement

Advertisement