• May 19 2024

“சூரிக்கு என் வீட்டுல சாப்பிட்ட நன்றிக்கூட இல்ல...” இலங்கை நடிகர் ஆவேசம்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக  தடம் பதித்துள்ளார். விடுதலை படத்தில் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி என பலரும் பாராட்டி வருகின்றனர். எனினும் குறிப்பாக அவர் எடுத்துள்ள ரிஸ்க்கை பார்த்து முன்னணி நடிகர்களே பிரமித்து போயுள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  நடிகர் சூரியை திட்டி தீர்த்துள்ளார் நடிகர் போண்டா மணி. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு சக நடிகர்கள் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டனர்.எனினும்  இதையடுத்து நடிகர் போண்டாமணிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.


அவருக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.இவ்வாறுஇருக்கையில்  நடிகர் போண்டா மணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 8 மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதாக கூறியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு 7 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அறுவை சிகிச்சைக்கு உதவுவதாக கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் போண்டா மணி. அத்தோடு  நடிகர் வடிவேலு தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று வருத்தப்பட்டுள்ள போண்டா மணி, நடிகர் சூரியும் தனக்கு உதவி செய்யவில்லை என ஆதங்கப்பட்டுள்ளார்.

​ 

நடிகர் சூரி தன் வீட்டில் தங்கி சாப்பிட்டவர் என்றும் அவர் ஒரு போன் பண்ணி கூட தன்னை விசாரிக்கவில்லை வருத்தப்பட்டுள்ளார். அத்தோடு கூட நடிக்காத விஜய்சேதுபதி சார் தனக்கு உதவி செய்யும் போது சூரிக்கு போனில் விசாரிப்பதற்கு என்ன என்றும் கேட்டுள்ளார் நடிகர் போண்டா மணி. அத்தோடு தாங்கள் 55 வாரம் செய்த காமெடி தொடரில் நடிக்க காதல் சுகுமார், நடிகர் சூரியை தினமும் அழைத்து வருவார் என்றும் அப்போது அவருக்கு தினமும் 200 ரூபாய் கொடுத்ததாகவும் கூறியுள்ளார் போண்டா மணி.

அப்போதெல்லாம் சூரி தன்னுடைய வீட்டில்தான் தங்கியிருப்பார் என்றும் தன்னுடைய வீட்டில்தான் சாப்பிடுவார் என்றும் கூறியுள்ள போண்டா மணி, ஜெயித்த பிறகு சூரி தன்னை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் போண்டா மணி இலங்கையை பூர்விகமாக கொண்டவர். தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement