• Apr 30 2024

ஆயுத பூஜையன்று வெளியாகவுள்ள தளபதி 68 படத்தின் சூப்பர் அப்டேட்- செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது. இப்டத்தைத் தொடர்ந்து விஜய் தனது 68 படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சி எடுக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.இப்படியான நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


அதாவது தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நாளைய தினம் வெளியாகவுள்ளதாம். இதனை அடுத்து படத்தின் அப்டேட்டுக்கள் வெளியாகும் என்று தகவல் வெளியாியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement