• May 05 2024

யூடியூபர் இர்ஃபான் ஆரம்பித்த புதிய ஸ்ரூடியோவைத் திறந்து வைத்த நடிகர் கார்த்தி- வெளியாகிய கிளிக்ஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 2016ம் ஆண்டு யூடியூப் சேனலை ஆரம்பித்து உணவு சம்மந்தமான வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் இர்ஃபான்.கையேந்தி பவன் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை, இர்ஃபான் சுவைக்காத உணவகங்களே தமிழ் நாட்டில் இல்லை எனலாம்.


மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற உணவகங்கள் எங்கே இருப்பினும், தேடிப்பிடித்து அவற்றை தனது அடுத்த வீடியோவில் சுவைபட சேர்த்து விடுவது இர்ஃபான் வழக்கம். இதற்காக தமிழகத்தின் மூலைமுடுக்கு முதல், விமானமேறி வெளிநாடு வரை பயணித்திருக்கின்றார்.


இதுவரை 2100 வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவரது இடைவிடாத கடின உழைப்பு மற்றும் சிறந்த உள்ளடக்கம் கொண்ட வீடியோக்கள் மூலம், YouTube, Instagram மற்றும் Facebook முழுவதுமாக 6 மில்லியன் ஃபாலோயர்ஸ்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார்.


இவருக்கு அண்மையில் திருமணமும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிலையில் தற்பொழுது இர்ஃபான் தனது பெயரில் ஸ்ரூடியோ ஒன்றை ஆரம்பித்துள்ளார்.சென்னை - நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோ, படப்பிடிப்பு, படத்தொகுப்பு, சிஜி மற்றும் அனிமேஷன் வேலைகளுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.


இதனால் இன்றைய தினம் இந்த ஸ்ரூடியோவை நடிகர் கார்த்தி திறந்து வைத்துள்ளதோடு இக்குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அவர்களின் விருப்பமான தொழிலைத் தொடரும் அவர்களின் நேர்மையான முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அவர் இர்ஃபானின் வீடியோக்கள் தனக்கு மிகவும் பிடிக்குமென்றும், அவரது வியக்கத்தக்க சாதனைக்காகவும் இர்ஃபானை வாழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement