• Apr 24 2024

துணிவு படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- வெளியான கேரக்டர் லுக் போஸ்டர்!- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது . 

மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இச்சூழலில் துணிவு படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர் நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 


அதன்படி பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் "மை பா" எனும் தொலைக்காட்சி செய்தியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கேரக்டர் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



 ‌




















Advertisement

Advertisement

Advertisement