• May 05 2024

Super Singer Junior 9 நிகழ்சியில் நடந்த மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்- கண்கலங்க வைத்த Promo 1

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 9.இந்த நிகழ்ச்சியினை மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் டிவோஷனல் ரவுண்டு இந்த வாரம் ஒளிபரப்பப்படவுள்ளது.அதில் பாடி வரும் அனனியா என்பவர் நெற்றிக் கண் படத்தில் இடம் பெற்ற சுழலி சுழலி பாடலை இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வலம் வரும் விஷ்வரூபினிக்காக பாடியுள்ளார்.

இதைக் கேட்ட எல்லோரும் ஆச்சரியடைந்ததோடு மேலும் விஷ்வரூபினிக்கு மனசில நிறைய கவலை இருக்கு அதை எல்லாம் வெளியில சொல்லமாட்டா அவளுக்கு நல்ல பிரெண்டா எப்பவும் இருப்பேன். அவளுடைய அம்மாவுக்கு ரீட்மெண்டிற்கு தன்னால் முடிந்த உதவி என்று சிறிய தொகை பணத்தையும் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதனைப் பார்த்த எல்லோரும் கண்கலங்கியுள்ளனர். அத்தோடு விஷ்வரூபினியும் அனனியா மாதிரி நல்ல நண்பி கிடைக்க கொடுத்து வைத்திருக்கோனும் என்று சொல்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.







Advertisement

Advertisement

Advertisement