• May 19 2024

ஒரே ஒரு பாடல் போட்டு மறைந்த நடிகர் மாரிமுத்துவை திணறச் செய்த டிஜே பிளக்- கடைசியில் நடந்த டுவிஸ்ட்- வைரலாகும் வீடியோ

stella / 8 months ago

Advertisement

Listen News!


திருச்செல்வம் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கோலங்கள் என்ற தொடரை இயக்கி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.அதன்பிறகு சில காலம் அவரது பெயர் பெரிய அளவில் வலம் வரவில்லை, தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

பெண் அடிமை, ஆணாதிக்கம் என இப்போதும் சமூகத்தில் ஆண்களால் கஷ்டப்படும் பெண்கள் குறித்த தொடராக எதிர்நீச்சல் உள்ளது.இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து மக்களை கவர்ந்தார்.


30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்தாலும் அவருக்கு ரீச் கொடுத்தது எதிர்நீச்சல் என்ற சீரியல் தான். இப்போது தான் வெற்றியை நோக்கி அவரது பயணம் தொடங்கியது ஆனால் அதற்குள் அவரது மரணமும் நிகழ்ந்துவிட்டது. இதனால் இவரது அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

அவர் பிரிவை ரசிகர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றனர்.இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதாவது இவர் உயிரிழக்க இரணடு வாரங்களுக்கு முதல் காமெடி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஸ்ராட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அங்கு டிஜே பிளக் கடல் படத்தில் இடம் பெறும் அடியே பாடலை போட்டுள்ளார்.

இந்த பாடலைக் கேட்ட மாரிமுத்து இதில லிரிக்ஸே இல்லையே எப்பிடி பாடுறது என்று கேட்க, ப்ரியங்கா அவன் உங்களை சும்மா கலாய்த்துத் தள்ளியுள்ளான் என்று கூற மாரிமுத்து ஏம்மா ஏய் என்று டிஜே பிளக்கை கலாய்த்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement