• Oct 16 2024

பிரேம்ஜியை தன்னுடன் நடிக்கக் கூடாது என்று விஜய் சொன்னாரா?- உண்மையை போட்டுடைத்த வெங்கட் பிரபு

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் சஞ்சய் தத், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ.கேங்ஸ்டார் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் இருக்கின்றனர்.

இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார் என்பதை இயக்குநர் வெங்கட் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அத்தோடு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இதற்காக வெங்கட் பிரபுவும், விஜய்யும் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர். அங்கு விஜய்யின் முழு உடம்பும் 3டியில் ஸ்கேன் செய்யப்பட்டது. எனவே சைன்ஸ் பிக்‌ஷன் படமாக இது இருக்குமோ என சந்தேகம் எழுந்திருக்கிறது. மேலும் விஜய் இரட்டை வேடம் என்றும் அதில் ஒரு விஜய்க்கு சினேகா ஹீரோயின் என்றும் கூறப்படுகிறது. 

இது ஒரு புறம் இருக்க இன்றைய தினம் விஜய் சென்னை திரும்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.இந்த நிலையில் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் கொடுத்த பழைய பேட்டி ஒன்று நேற்று ட்ரெண்டானது. அதில் பிரேம்ஜியிடம் விஜய், 'நீ அஜித் ஆளுனு தெரியும். எனவே நானும் உங்கள் அண்ணனும் சேர்ந்து படம் பண்ணும்போது நீ நடிக்கக்கூடாது'என சொன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்தார்.


 இந்நிலையில் இதுகுறித்து வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில், "இந்த சம்பவம் மங்காத்தாவுக்கு பிறகு நடந்தது. அதுவும் அவர் ஜோக்குக்காக அப்படி சொன்னார். இப்படி எதையும் பரப்பாதீர்கள். அன்பை மட்டும் பரப்புவோம். வெறுப்பை அல்ல" என பதிவு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement