• Sep 27 2023

நீயும் குப்பைத் தொட்டில படுத்துக்க வேண்டியது தானே- யூடியூப் பிரபலம் காத்து கறுப்பை வெளுத்து வாங்கிய ஷகீலா

stella / 1 month ago

Advertisement

Listen News!

யூடியூப் சேனல் மூலம் பிரபல்யமான பலர் இருக்கின்றனர். அந்த வகையில் கோமாளித்தனமாகவும், ஆபாசமாகவும் வீடியோ போட்டு பிரபல்யமானவர் தான் காத்து கருப்பு. ஆரம்பத்தில் சின்ன சின்ன வீடியோக்ளை போட்டு வந்த இவர் திருச்சி சாதனா என்பவரின் உதவியுடன் பல ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டிருந்தார்

 இரட்டை அர்த்தத்தில் பேசி வீடியோக்களை பதிவிடுவதை கைதேர்ந்தவராக இருக்கும் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டில் ஷகீலா'இப்படி வீடியோ செய்வதற்கு சாதனா எதுவும் அமௌண்ட் வாங்குகிறாரா' என கேட்டார். அதற்கு பதிலளித்த கலை, 'அதுக்கு பேமெண்ட் வாங்குகிறார்களா என்பது தெரியாது. ஆனால் வீடியோவுக்கு பேமெண்ட் வாங்குகிறார் என கூறினார்.


 இதனால் கடுப்பான ஷகீலா, "வேற எதுக்கு பேமெண்ட் வாங்குகிறாரானு உனக்கு தெரியாது. ரொம்ப வெகுளி மாதிரி நடிக்கிறியா?.நான் உன்னிடம் என்ன கேட்டேன் ஷூட்டிங்கிற்கு பேமெண்ட் தரியானுதான் கேட்டேன். அவள்ட்ட நீ டபுள் மீனிங்ல விளையாடு, என் கிட்டை விளையாடாத.

நான் உன்னிடம் க்ளீனா ஷூட்டிங்கிற்கு பேமெண்ட் வாங்குறாங்களானு கேட்டேன். அதுக்கு நீ என்ன சொல்லணும் வாங்குறாங்க, வாங்கலனு சொல்லணும். அதை விட்டுட்டு அதுக்கு வாங்குவாங்களானு தெரியாதுனு சொல்ற. ஒரு பெண்ணை பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த உரிமையுமே இல்லை. அவளே உனக்கு போனாபோதுனு வீடியோ செஞ்சு கொடுக்குறா. நீ ஏன் உன் வாயாலேயே மண்ண அள்ளிப்போட்டுக்குற' என கடுமையாக பேசினார்.


மேலும் பேசிய ஷகீலா, "நீ என்ன எந்த இடத்திலும் உண்மையே பேச மாட்டேங்குற. கண்ண பார்த்து உன்னால பேச முடியல. வாழ்க்கையே இப்படியே இருக்கும் என்று நினைக்கிறியா என கேட்டார். அப்போது குறுக்கிட்ட கலையோ, நான் எனது பெயரை மாற்றுவேன். மாற்றிவிட்டு எம்.பி. தேர்தலில் நிற்பேன். குப்பையை நானே போட்டு அதை நானே குப்பைத்தொட்டியில் போடுவது போல் வீடியோ எடுத்து அப்லோட் செய்து நல்ல பெயரை பெறுவேன்" என ஒரே போடாக போட்டார். அதற்கும் கோபமான ஷகீலா ஏன் நீயும் போயி குப்பைத்தொட்டில படுத்துக்க வேண்டியதுதானே என எதிர் கேள்வி கேட்டு ஆஃப் செய்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் காத்து கருப்பு கலை போன்ற ஆட்களை பேட்டியே எடுக்கக்கூடாது. அவர்களை ஏன் வளர்த்துவிட வேண்டும் என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement