• Apr 27 2024

சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்'படத்தை பார்த்த சன் பிக்சர்ஸ் எடுத்த அதிரடி முடிவு..! என்ன தெரியுமா?

Jo / 11 months ago

Advertisement

Listen News!

ஜெயிலர் படத்தை பார்த்த பிறகு சன் பிக்சர்ஸ் எடுத்திருக்கும் முடிவால் ரஜினிகாந்த் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக கட்டாயம் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அதனால் இளம் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

பீஸ்ட் கொடுத்த தோல்விக்கு பிறகும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் நெல்சன் தெளிவாக இருக்கிறார். எனவே ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கிவருகிறார். அவர் அவ்வாறு உழைத்திருப்பதை சமீபத்தில் வெளியான படத்தின் க்ளிம்ப்ஸில் உணர முடிவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.

 தர்பார் கொடுத்த தோல்வி காரணமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்த அண்ணாத்த படத்துக்கு தனது சம்பளத்தை குறைத்தார் ரஜினிகாந்த். அண்ணாத்த படமும் தோல்வியடைந்ததால் ஜெயிலர் படத்துக்கு தனது சம்பளத்தை அவர் கணிசமாக குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜெயிலர் படத்துக்காக அவர் 80லிருந்து 90 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி தற்போது தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. 

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டுத்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ரஜினிகாந்த்,.லோகேஷ் - ரஜினி இணையும் படத்தை தயாரிப்பதற்கு பல நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த ரேஸில் இப்போது லீடில் இருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் என்கின்றனர். 

விவரம் அறிந்தவர்கள். அதுமட்டுமின்றி, லோகேஷ் கனகராஜுக்கு 40லிருந்து 50 கோடி ரூபாய்வரை சம்பளமாக தர சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரெடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ரஜினிக்கு கொடுக்கப்படும் சம்பள விஷயத்தில் சன் பிக்சர்ஸ் ஒரு முடிவெடுத்திருக்கிறதாம். அதாவது இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததால் சம்பளத்தை குறைத்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் சமீபத்தில் ஜெயிலர் படத்தை பார்த்தனராம்.

படத்தை பார்த்து பரம திருப்தி அடைந்த அவர்கள் ரஜினியை வைத்து அடுத்து தயாரிக்கும் படத்தில் சம்பள தொகையை கணிசமாக உயர்த்த முடிவெடுத்திருக்கிறார்களாம். எனவே ரஜினிகாந்த் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நம்பர் 1 என்ற இடத்தை மீண்டும் அடையவிருக்கிறார். இப்போது விஜய் டாப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement