• Mar 28 2024

ஆத்தாடி...!! 42வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சன்னி லியோனின் சொத்துமதிப்பு இத்தனை கோடிகளா? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

முன்னாள் ஆபாச நடிகையும் பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான சன்னி லியோன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

1981ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்த கரஞ்சித் கவுர் ஆபாச நடிகையாக மாறும் முடிவை எடுத்த நிலையில், சன்னி லியோனாக உருவெடுத்தார்.தனது இளமை காலம் முழுவதும் ஆபாச நடிகையாக நடித்த சன்னி லியோன் உலகளவில் அப்போதே ஃபேமஸ் ஆகி இருந்தார். பல ஆண்டுகள் கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

ஆபாச நடிகையாக வலம் வந்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் தனது கவர்ச்சியால்  கவர்ந்திழுத்த சன்னி லியோன் அந்த தொழிலே வேண்டாம் என ஒரு கட்டத்தில் முடிவு செய்து விட்டு பாலிவுட்டில் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பின்னர் 2012ல் ஜிஸ்ம் 2 படத்தில் கவர்ச்சி நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஏகப்பட்ட பாலிவுட் கவர்ச்சி நடிகைகளுக்கு கடும் போட்டியாக சன்னி லியோன் மாறிய நிலையில், பாலிவுட் படங்களை கடந்து மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

அதன் பின்னர் தமிழில் வீரம்மா தேவி படத்தில் நடித்து வந்தார் சன்னி லியோன்.  கடந்த ஆண்டு இறுதியில் ஓ மை கோஸ்ட் படத்தில் கவர்ச்சி கோஸ்ட்டாக வந்து கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் சன்னி லியோன். ஷீரோ எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை சன்னி லியோனுக்கு மும்பையில் ஒரு பிரம்மாண்ட வீடு உள்ளது. ஆனால், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் தான் வசித்து வருகிறார். 19 கோடி ரூபாய் மதிப்புள்ள மேன்சனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

டேனியல் வெப்பரை திருமணம் செய்துக் கொண்ட சன்னி லியோன் நிஷா எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், வாடகைத்தாய் மூலமாக இரு ஆண் குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார்.ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் சன்னி லியோனிடம் 98 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை சன்னி லியோன் 42 வயதானாலும் இன்னமும் தனது இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படங்களை பகிர்ந்து இணைய வாசிகளுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.இந்நிலையில், #SunnyLeone ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சன்னி லியோனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





Advertisement

Advertisement

Advertisement