• Apr 17 2024

இஸ்லாமிய பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் ''ஃபர்ஹானா'' ...முதல் வசூல் இவ்வளவு தானா?

Jo / 11 months ago

Advertisement

Listen News!

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ஃபர்ஹானா படத்தை இயக்கி உள்ளார்.இப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. மேலும் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஒரு சில இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வெளிவரும் எத்தனையோ திரைப்படங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியான போதே இப்படம் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் இப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி இருந்தனர். 

இதையடுத்து, ஃபர்ஹானா திரைப்படம் மத உணர்வுகளுக்கு எதிரான படம் இல்லை, படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் மனதிற்கு வேதனையை தருவதாக உள்ளது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என நம்புவதாக படக்குழு அறிக்கை வெளியிட்டு இருந்தது.இதையடுத்து ஃபர்ஹானா திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தைலம்மை திரையரங்கில் திரையிடப்பட இருந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக படம் திரையிடப்படவில்லை. இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட காவலர்களின் உதவியுடன் இப்படம் திரையிடப்பட்டது.

தமிழ்,தெலுங்கு, மலையாளத்தில் வெளியான ஃபர்ஹானா திரைப்படம் இந்திய அளவில் 24 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 7 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சரியான வசூலை பெறவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement