• Jan 22 2026

"ஜனநாயகன்" படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவு.. குஷியில் ரசிகர்கள்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பான திரைப்படங்களில் ஒன்றான விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய “ஜனநாயகன்” படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. ஜனவரி 9ஆம் தேதி அதாவது, இன்று ரிலீஸ் ஆக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்கப்படாததால் ரசிகர்களையும் தயாரிப்பு குழுவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய விடயம், படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டும், அதனால் சான்றிதழ் வழங்க தடை விதிக்கப்பட்டது என்பதே. பட தயாரிப்பு நிறுவனம் இதனை முறையாக எதிர்கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் (ஜனவரி 6), நீதிபதி பி.டி.ஆஷா படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான விசாரணையை கவனித்தார். நீதிபதி விசாரணையில், வழக்கு தொடர்பான தீர்ப்பை ஜனவரி 9 அன்று வழங்க திட்டமிடுவதாக அறிவித்தார்.

அதன்போது, நீதிமன்றம் சர்ச்சைக்குரிய காட்சிகளை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தது. இது தயாரிப்பு குழுவிற்கு மிகப் பெரிய நம்பிக்கையளிக்கும் தீர்ப்பாகும்.

அத்துடன் நீதிமன்றத்தின் முடிவில், “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

Advertisement

Advertisement