• Nov 22 2024

சுச்சி லீக்ஸ்ல வந்த Photos-லாம் Trisha தான் கொடுத்தாங்க... புதிய புரளியை கிளப்பிய சுசி! அதிர்ச்சியில் தமிழ் சினிமா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் தற்போது பாடகி சுசித்ரா அளித்து வரும் பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதில் அவர் தனது முன்னாள் கணவரை மட்டுமின்றி, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா, பயில்வான் ரங்கநாதன், திரிஷா ஆகியோரை பற்றி பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதன்படி, நடிகர் தனுஷ் நல்ல அப்பா ஆனால் ஐஸ்வர்யா மிகவும் மோசக்காரி. அவர் பிள்ளைகளை கவனிப்பது இல்லை. அவருடன் பிள்ளைகள் இருந்தால் கேட்டுப் போய்விடும் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் தனது முன்னாள் கணவருக்கும் நடிகர் தனுஷுக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக கூறி அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.


இந்த நிலையில், கடந்த காலத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தில் வெளியான நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் யாவும் திரிஷா தான் கொடுத்து போடச் சொன்னதாக தற்போது தெரிவித்து உள்ளார்.

அதாவது அவர்கள் பிரபலமாவதற்கு தன்னை பயன்படுத்தியதாகவும் அதில் பகிரப்பட்ட புகைப்படங்களை திரிஷா தந்து தான் வெளியானதாகவும் தற்போது தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர்கள் சிரிச்சி சிரிச்சி பண்ணிய பிராங்க் தான் அது. அதுக்கு பிறகு அவங்களே ட்விட் போடுவாங்க, என்னை சபிப்பாங்க, அப்புறம் அவங்களே என்னை மன்னிப்பாங்க என்று திரிஷா பற்றி விளாசி தள்ளியுள்ளார் சுசி.

Advertisement

Advertisement