• May 05 2024

முதல்ல தப்பா பார்க்கிறதை நிறுத்துங்க- இயக்குநர் வெற்றிமாறனை நேரடியாக கண்டித்த குஷ்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

சோழ வம்ச வரலாற்றினை பொன்னியின் செல்வன் என்னும் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வருகின்றது. வெளியாகிய நான்கு நாட்களில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இதில் நடித்துள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை பக்காவாக பிரதிபலிப்பதாகவும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் நெக்கடிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றது.


முன்னதாக ராஜராஜ சோழன் சாமியே கும்பிட மாட்டார் எனும் கருத்து நிலவியது. இந்நிலையில்  ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரித்து உள்ளனர் என வெற்றிமாறன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது வெற்றிமாறன் சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதன் விளைவு தான் தமிழ்நாடு இன்றளவும்  மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற காரணிகள் ஊடுருவ முடியாத பக்குவத்தோடும்  இருக்கிறது.

சினிமாவை அரசியல் மையமாக்குவது மிக முக்கியம். நடுவில் சில காலம் அது எடுபடாமல் போய்விட்டது. சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும் போது தான் நம்முடைய அடையாளம் நம்மிடமிருந்து  எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவருக்கு காவி உடை, ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரித்தல் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.என பேசியிருந்தார். 


இது குறித்து  பல விமர்சனங்களும் எழுந்தன.இந்நிலையில் பிரபல நடிகையும், பாஜக செய்து தொடர்பாளருமான குஷ்பூ, இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ, அதையே பார்க்க வேண்டும். எல்லாத்திலேயும் தப்பு கண்டுபிடிக்கணும், என்னோட நோக்கத்துல மட்டும் தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சாடி உள்ளார்.இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement