• May 07 2024

நடிகர் ராஜ்கிரணின் குடும்ப விஷயத்தில் தலையிட்டு குட்டையைக் குழப்பிய பிரபல தொலைக்காட்சி- திருமணம் என்றால் சும்மாவா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கம்பீரமான நடிகராக வலம் வருபர் தான் ராஜ்கிரண். இவர் இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். எப்போதும் ஸ்ரோங்கான கதாப்பாத்திரங்களில் நடிப்பதால் இவரை அறியாத ரசிகர்களே இல்லை எனலாம்.

இந்த நிலையில் கடந்த மாதம் இவருடைய வளர்ப்பு மகள் சீரியல் நடிகரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதால் கடும் கோபத்துடன் இவர் பேசிய வீடியோ எல்லாம் வைரலானது. மேலும் இவரது வளர்ப்பு மகளை திருமணம் செய்தது சீரியல் நடிகர் முனீஸ்வரன் என்பதும் முக்கியமாகும்.


இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராஜ்கிரண் முனிஷ்ராஜ் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்

இந்த நிலையில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி ஷு தமிழ் சேனலில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முனிஷ்ராஜ் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் டிவி குழுவினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement