சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பராசக்தி’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை தொடர்ந்து, படக்குழுவினர் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ‘பராசக்தி’ பட விழா ஒன்று ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரளாவில் நடைபெற்ற இந்த விழாவில், படத்தின் முக்கிய நடிகை ஸ்ரீலீலா ரசிகர்களுடன் கலகலப்பாக உரையாடிய தருணங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஸ்ரீலீலா ரசிகர்களிடம் தமிழில் கேள்வி கேட்டதும், அவர்கள் அதற்கு தமிழில் பதிலளித்ததும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களிடம் பேசும் போது ஸ்ரீலீலா,“நீங்க எல்லாம் எப்படித் தமிழ் இவ்வளவு நல்லா பேசுறீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கேரளா ரசிகர்கள், “எங்களுக்கு டப்பிங் எல்லாம் தேவையில்ல. எவ்வளவோ தளபதி படங்களை பார்த்திருக்கிறோம். அதனால் சாதாரணமாவே தமிழ் வரும்,”என்று சிரித்தபடியே கூறியுள்ளனர்.
இந்த பதிலை கேட்டதும், ஸ்ரீலீலா சிறிது நேரம் பேச முடியாமல் ஷாக் ஆகியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது X (Twitter), Instagram, Facebook, YouTube Shorts போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Listen News!