• Feb 12 2026

பாக்கியத்தின் முடிவால் தலைகீழானது மயிலின் வாழ்க்கை.. பரபரப்பான திருப்பத்தில் டுடே எபிசொட்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் பாக்கியத்தைப் பார்த்து நீங்க சொன்னதை அப்புடியே பொலிஸ் கிட்ட சொல்லிட்டன் தப்பா ஏதும் நடக்காமல் இருந்தா சரி என்கிறார். அதுக்கு பாக்கியம் நாங்க வேற வழியில்லாமல் தானே இப்புடி செய்தனாங்க நாளைக்கே மாப்பிள்ளை உன்ன வீட்ட கூட்டிக் கொண்டு போயிடுவார் என்கிறார். அந்த நேரம் பார்த்து மீனா போன் எடுத்து பாக்கியம் கிட்ட மயில் அக்காவோட கதைக்கணும் என்கிறார்.


பின் மீனா பாக்கியத்தைப் பார்த்து நீங்க எல்லாமே தெரிஞ்சு செய்யுறீங்களா இல்ல வேணும் என்றே செய்யுறீங்களா என்று கேட்கிறார். மேலும் நீங்க செய்த வேலையால மயில் அக்காவுக்கு எந்த நல்லதும் நடக்காது என்கிறார் மீனா. மறுபக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் கிட்ட என்னதான் பிரச்சனை இருந்தாலும் இப்படியா ஒரு பொண்ணை வெளியில அனுப்புவிங்க என்று கேட்கிறார். 

அதுக்கு பாண்டியன் நான் அவங்களை எதுவுமே பண்ணல என்று சொல்லுறார். மேலும், அவங்கள கஷ்டப்படுத்துற அளவுக்கு எங்க குடும்பம் ஒன்னும் தப்பான குடும்பம் இல்ல என்கிறார் பாண்டியன். பின் கோமதியும் இன்ஸ்பெக்டர் கிட்ட அவங்க சொல்லுறது முழுக்க பொய் என்கிறார். அதனைத் தொடர்ந்து சரவணன் என்ட வீட்டு ஆட்கள் எந்த தப்பும் பண்ணல அவங்களை விட்டிடுங்க என்கிறார்.


பின் இன்ஸ்பெக்டர் பாக்கியத்தைப் பார்த்து நீங்க கொடுத்த கம்பிளைன்ட்டுக்கும் அவங்க கதைக்கிறதுக்கும் சம்பந்தமே கிடையாது என்கிறார். அதுக்கு பாக்கியம் அவங்க நடிக்கிறாங்க என்கிறார். அதனைத் தொடர்ந்து, முத்துவேல் அந்த வீட்டில அப்புடி தப்பா நடக்கிறது யாருமே இல்ல என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement