• Apr 24 2026

தனிமை தான் சிறந்தது.. எனக்கு அதுவே மிகவும் பிடிக்கும்.! ரச்சிதா மஹாலட்சுமி ஓபன்டாக்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் உடன் காதலில் விழுந்து பின்னர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் 2021ஆம் ஆண்டு பிரிவு ஏற்பட்டது.


இந்த பிரிவுக்குப் பிறகு ரச்சிதா மகாலட்சுமி தனியாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், சமீபத்தில் அவர் இந்த வதந்திகளுக்கு தெளிவான முறையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவர் கூறுகையில், “தனிமை என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எவ்வளவு பெரிய கூட்டு குடும்பத்தில் இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் தனிமையை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் நான் சிங்கிளாகவே இருக்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், “என் வீடு, என் பூனை குட்டி இவை மட்டுமே என்னுடைய உலகம்.” என்று அவர் கூறியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரச்சிதாவின் இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிலர் அவரது மனநிலையை புரிந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், தனது வாழ்க்கையை தனது விதிமுறைகளில் வாழ விரும்பும் அவரது இந்த நேர்மையான பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement