• Apr 24 2024

தனுஷூடன் நடிப்பதற்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் கே.ஜி.எஃப் வில்லன் கமிட்டாகி உள்ளார்.

நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில், நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார். செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.இந்தப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக அவர் நடித்துள்ளார்.இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.அத்தோடு  பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தில், தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

அத்தோடு இப்படத்தில், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தையும் தயாரித்துள்ளது.


இந்த படத்தைத் தொடர்ந்து முன்னணி இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் இரண்டாவது தெலுங்கு படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியாகி உள்ளது.மேலும்  இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு கூறியுள்ளது. அத்தோடு நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியாக உள்ளது.


இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத் நடிக்க 10 கோடி வரை கேட்பதாக கூறப்படுகிறது. நடிகர் சஞ்சய் தத் கேஜிஎஃப் 2 திரைப்படத்தில், யாத்ரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.அத்தோடு கேஜிஎஃப் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலைவாரிக்குவித்தது.

Advertisement

Advertisement

Advertisement