• May 05 2024

இவளுடைய சிரிப்பு உண்மையானது- அடடே அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதரின் குழந்தையா இது?- செம கியூட்டாக இருக்கிறாங்களே

stella / 10 months ago

Advertisement

Listen News!

செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் சீரியல் நடிகர் அர்னவ்வை 5 வருடங்களாகக் காதலித்து ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமான இவர் அர்னவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அர்னவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்பொழுது விடுதலை பெற்று சீரியல்களில் நடிப்பதில ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில்  நடிகை திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து திவ்யா குழந்தையுடன் ஷீட்டிங்கிலும் பங்குபற்றி வருகின்றார்.


சமீபத்தில் நடிகர் அர்னவ் 2 பெண்களை ஏமாற்றியதாக கூறி, அதுகுறித்த ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இச்சம்பவத்தை அடுத்து நடிகர் அர்னவ் அடி ஆட்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்து தன்னுடைய வீட்டில் தகராறு செய்ததாக நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.


இப்படியான நிலையில் திவ்யா அர்னவ்வின் குழந்தையோடு சேர்ந்து எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்தக் குழந்தையைப் பார்த்த ரசிகர்கள் அடடே குழந்தை செம கியூட்டா இருக்கின்றாரே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement