• May 18 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் படம் தான் விஜய்யின் இறுதிப்படமா?- தளபதி சினிமாவை விட்டு விலகுகின்றாரா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் விஜய்.30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.லியோ பட ஷூட்டிங் முடிந்ததும், அடுத்ததாக விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.


இப்படி ஷூட்டிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மறுபுறம் அரசியல் பணிகளையும் சைலண்டாக செய்து வருகிறார். அவரின் சமீபத்திய நகர்வுகள் அனைத்தும் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன. குறிப்பாக நேற்று நடத்த பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் வாக்களிப்பது எப்படி என்றும் மாணவர்களுக்கு தெரிவித்திருந்தர்.இதனால் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் அரசியலில் நுழையலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாகவும், அவர் அரசியல் கட்சி தொடங்கி அதற்காக வேலைகளை செய்ய உள்ளதால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள தளபதி 68 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தில் நடித்து முடித்த பின்னர் அரசியல் வேலைகளை ஆரம்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அரசியலில் நுழைந்துவிட்டால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவர் நடிப்பை நிறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement