தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பயணித்து வருபவர் இயக்குநர் சிவக்குமார் முருகேசன். எப்படியாவது சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே கனவுடன், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் கடுமையாக உழைத்த பின்னரே அவர் இன்று இயக்குநராக உயர்ந்துள்ளார்.
சினிமா பயணத்தின் தொடக்கத்தில் மூன்று குறும்படங்களை இயக்கிய சிவக்குமார் முருகேசன், அதன் பிறகு Crowd Control AD, Clap AD, Art Department AD என பல்வேறு தொழில்நுட்பப் பணிகளை செய்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், கதை விவாதங்கள், திரைக்கதை எழுதுதல், வசனம் அமைத்தல், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் என ஒரு திரைப்பட உருவாக்கத்தில் இருக்கும் அனைத்து நிலைகளிலும் பணியாற்றியுள்ளார்.
தற்போது ராதிகா சரத்குமார் நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மூலம் சிவக்குமார் முருகேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கடும் பசியில் இருப்பவனுக்கு ஒரு கைப்பிடி கஞ்சி கிடைத்தாலே உயிர் பிழைத்து விடும்.. ஆனால் சிவகார்த்திகேயன் சார் என்னை நம்பி அமர வைத்து தாய்க்கிழவி என்னும் ராஜ விருந்தையே படைத்துவிட்டார்.
அந்த விருந்தில் வயிறும் மனசும் நிறைந்திருக்கும் போதே, இப்போது 'சேயோன்' என்னும் ஒரு மூட்டை விதை நெல்லை என் கையில் கொடுத்துள்ளார். கண்டிப்பாக பெரிய விளைச்சலை காட்டுவேன்.. என இயக்குனர் சிவாகுமார் முருகேசன் கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘தாய் கிழவி’ படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சிவக்குமார் முருகேசனின் இந்த நீண்ட போராட்டப் பயணம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றன.
Listen News!