• May 06 2024

தனது தோல்விப் படங்களுக்கு ரிவியூ கொடுத்த சிவகார்த்திகேயன்- அடடே இந்த விஷயம் எல்லாம் மிஸ் ஆச்சா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் சாதாரண மிமிக்கிரி ஆட்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்பொழுது உச்ச நட்சத்திரமாகவும் விளங்குகின்றார்.

 அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகிய  டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.அடுத்து இவர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.


இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயனிடம் சீமராஜா, ஹீரோ, மிஸ்டர் லோக்கல் படம் குறித்து கேள்வி எழுப்பட்டது.அப்போது சிவகார்த்திகேயன் மனம் திறந்து சில விஷயங்களை ஷேர் செய்தார். அதாவது இந்த படங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனதற்கு என்ன காரணம்? என்பதை தனது பார்வையில் இருந்து விளக்கி இருந்தார்.

”சீமாராஜா படத்தை பொறுத்தவரையில் இது எந்த மாதிரியான படம் என்பதை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை,பிளாஷ்பேக்கில் வரும் கதையின் முக்கியத்துவத்தை ஹீரோ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை கதையில் வலுவாக சொல்லவில்லை. அதே போல் இந்த கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கர், ரஜினி முருகன் படத்தில் இருந்த சூரி - சிவா இன்னஸண்ட் காமெடி ட்ராக் இதில் மிஸ்ஸிங் என்பது மிகப் பெரிய குறை”  எனவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


 ராஜேஷ் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் லோக்கப் படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜேஷை மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.அதே போல் ”மிஸ்டர் லோக்கல் ஆரம்பத்தில் ஒருகதை இருக்கும், நடுவில் வேற மாதிரி ட்ராக்கில் சென்று கிளைமாக்ஸ் வேற மாறி முடியும்”  என தெரிவித்துள்ளார்.

 அதே போல் ஹீரோ படம் குறித்தும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். ”ஹீரோ கதை மிகவும் சூப்பராக இருக்கும். ஆனால் படத்தின் கதை அர்ஜூன் சாருடையதா அல்லது ஹீரோவை பற்றியதா என்பதை ஆடியன்ஸிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் குழந்தைகள் தயாரிக்கும் சேட்டிலைட் சீன்கள் சரியாக விவரிக்கப்படவில்லை”  என கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்து வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement