• Jul 27 2024

50 லட்சம் ரூபாய் அள்ளிக்கொடுத்த சிவகார்த்திகேயன்.. எல்லாம் அந்த ஒரு காரணத்திற்காக தான்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் ஐம்பது லட்சம் ரூபாய் அள்ளிக் கொடுத்து நிதி உதவி செய்துள்ளதை அடுத்து அவருக்கு தமிழ் திரை உலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர் பதவியேற்ற உடன் ஒரு மிகப்பெரிய கட்டிடம் சென்னை திநகரில் உள்ள இடத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டது என்பது அதற்காக கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த கட்டிடத்தின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென பொருளாதார பற்றாக்குறை காரணமாக இந்த பணி நிறுத்தப்பட்டதாகவும் இதையடுத்து பணம் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் சுற்று புறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க கட்டடத்தை முடிப்பதற்காக ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பிரபலங்களிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி அதன் பின்னர் கட்டிடத்திலிருந்து வரும் வருமானத்தில் திருப்பி கொடுத்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

முதல் நபராக நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் கொடுத்த நிலையில் அதன் பின்னர் கமல்ஹாசன், விஜய் உள்பட ஒரு சில நடிகர்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்தனர் .

இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க கட்டிட பணிக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் பல பிரச்சனைகளுக்கு நடிகர் சங்கம் தீர்வு செய்து கொடுத்த நிலையில் அந்த ஒரு காரணத்திற்காக தான் 50 லட்சம் ரூபாய் அவர் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement