• Apr 27 2024

உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் டான் பட மாஸ் வசூல் வேட்டை-வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 3, மனம்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களில் நடித்தவர் சிவகார்த்திகேயன். இவரை மிகவும் உயர்த்தி வைத்த படம் என்றால், அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றே சொல்லலாம்.

மான்கராத்தே,எதிர்நீச்சல் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார் நம்ம சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் கடந்த மே 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்நிலையில் டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 12 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.

மேலும் ரிலீஸ் ஆன வேகத்திலேயே படம் ரூ. 100 கோடியை வசூலித்தால் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.

தற்போது படம் 13 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 102 கோடி வரை வசூலித்திருக்கிறதாம்.

எனினும் இடையில் பெரிய நடிகரின் படங்கள் எதுவும் வெளிவரவில்லை எனவே படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement