• May 10 2024

இடை தெரிய முழு நீள உடையணிந்து... ரொமாண்டிக் லுக் கொடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத் திரைப்படமான 'சுவப்னா சஞ்சரி' என்ற படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனு  இமானுவேல். இப் படத்தில் இவர் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்திருந்தார். அதன் பின்பு அவர் ஆக்சன் ஹீரோ 'பிஜூ' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.


மேலும் தமிழ் சினிமாவில் இவர் சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.


அதுமட்டுமல்லாது தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'மகா சமுத்திரம்' என்ற திரைப்படத்திலும் கமிட் ஆகி நடித்துள்ளார்.

அத்தோடு 'துப்பறிவாளன்' மற்றும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' போன்ற திரைப்படங்களில் கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல் நல்ல பிள்ளையாக வந்து சென்ற அனு இமானுவேல் சிறிது காலத்தின் பின்னர் குட்டைப் பாவாடையில் தொடை பளீரென தெரிய மொட்டை மாடியில் வெட்ட வெளியில் காற்று வாங்கும் புகைப்படங்கள் உட்பட பல கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.


இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் ஹோம்லி கேர்ள் லுக்கிற்கு மாறி இருக்கின்றார். அதாவது முழு நீளப் பாவாடை, தாவணி அணிந்து ரொமாண்டி லுக் கொடுத்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அவருக்கு அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement